|
(வேறு)
‘கண்ணா வருக
கனவே வருக!
விண்ணே வருக
வியப்பே வருக!
அன்பே வருக
அமுதே வருக!
இன்பே வருக
எழிலே வருக
கலையே வருக
கடலே வருக!
அலையே வருக
அகமே வருக!
(வேறு)
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத் தாண்டு
பாடினேன் கண்ணனுக்கே!
பல்லாண்டு கொண்ட
பரிவால் இருகரம்
பற்றினான் கண்ணனென்னை!
(வேறு)
கன்றெனப் பாய்ந்திரு
கையொடு கண்ணனைக்
கட்டி யணைந்திடவும் - அவன்
நின்றிரு கண்களில்
நீரைப் பொழிந்தனன்
நேய மழைதனைப் போல்!
|