|
பச்சைப் பசுங்செடிகள்
பார்த்து நகைத்திடவும்
கொச்சைப் பசுந்தமிழில்
கொள்ளும்விலை கூறிட்டாள்!
கூடையிலே பச்சைநிறக்
கொம்பும் நறுஞ்செடியும்
ஆடையிலே மாதர்
அழகுபோல் மின்னிற்று!
‘செடிக்கு விலையதிகம்
சிங்காரி’ என்றேன்!
வெடிக்கும் மலர் மொட்டாய்
விண்ணரசி தோன்றிடுவாள்;
தோட்டத்தில் நின்று
சுடர்முகத்தைக் காட்டிடுவாள்
கேட்டவிலை கொடுத்தால்
கேட்காமல் வந்திடுவாள்!”
என்றாள் அவள்திறத்தை
என்னென் றுரைத்திடுவேன்
வென்றாள் சிறுபேச்சில்
வேறென்ன நான்சொல்ல?
கண்ணன் அவளுக்குக்
கைநிறையக் காசுதந்து
வண்ணமலர்ச் செடியை
வாங்கி மகிழ்வுற்றான்!
கற்றார் தமக்கும்
கவிதைதரும் ஏழைப்பெண்
விற்றாள், அகன்றாள்
விரைவாக யாம்சென்றோம்!
|