|
பத்திரிகைச் செய்தி:
சுக்கிரன் சேரி சுடுதழல் மூள
எரித்தவன் கண்ணன் எனும்பெய ருடையோன்
சேரியை நோக்கித் திரண்டது போலீஸ்
எதிர்த்தனன் கண்ணன் எழுந்திடு வேட்டில்!
மடிந்தனன் கண்ணன் மண்மிசை வீழ்ந்து!”
“சதியோ, சூழ்ச்சியோ, ஜாதிச் செருக்கோ,
வஞ்சமோ பகைவர் வகுத்திடும் பொய்யோ
எதுநின் உயிரினை ஈர்த்ததோ கண்ணா
அதுவும் அவரும் அழிந்திட!” என்றேன்!
|