பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 19

(வேறு)

துப்பாக்கிக் குண்டு பட்டும்
தூக்கினில் ஏற்றப் பட்டும்
சிப்பாய்கள் படையி னோடு
தீரமாய்ப் போர்பு ரிந்தோம்
ஒப்பிலாச் சிறப்பு வாய்ந்த
உழைத்திடும் வர்க்கத் திற்கே
இப்பொழு தினிய வாழ்வும்
சுதந்திர இடமும் தேவை!

வறுமையாம் விலங்கும், துன்ப
வாடையாம் சிறையும், தூளாய்
நொறுங்கிட ஊழித் தீபோல்
நொடியிலே கிளம்பும் யுத்தம்
குறுகிய சுயந லத்தைக்
குலைத்திடும்! அதற்கு மேலே
நிறுவிடும் சுதந்தி ரத்தை
நித்தமும் பாடு வேனே!

‘வானொலி’ - 1948

குறிப்பு: 1948ம் ஆண்டு, ஆகஸ்டு சுதந்திர தினக் கவியரங்கம் பன்மொழிப்
புலவர் திரு. தொ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் தலைமையிலும்,
அந்நாள் சென்னை மாகாணப் பிரதமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்
முன்னிலையிலும் சென்னை வானொலி அரங்கத்தில் நிகழ்ந்த போது நம்
கவிஞரால் பாடப்பட்டது.