பக்கம் எண் :

48தமிழ்ஒளி கவிதைகள்2

நன்று நன்று தூதுவரே! நாமுரைத்தல் கேளுங்காண்;
யாருக்கு நீங்கள் பிரதிநிதி? அஃதன்றி
யாருக்கு நீங்கள் அமைத்திட்ட சங்கங்கள்?
போட்டியிடச் சங்கம் வைத்தால் பொல்லா எமதூதன்
போட்டியிடும் வழக்கம் பூதலத்தில் உண்டன்றோ!

இந்த சரித்திரம் தெரியாதா? 

நீங்கள் படித்ததெல்லாம் சோற்று நிகண்டுகளும் 
வாங்குகின்ற லஞ்சம் வளர்க்கும் சரித்திரமும்

அதுவுமன்றி, 

தேசீயக் காங்கிரஸூம் சோஷலிச தீரர்களும் 
பேசியதைக் கேட்டும் பெரிய ‘குபேர்’ துரையின் 
‘செல்வாக்கை’க் கண்டும், சிரத்திற்கு மேல்தொங்கும் 
கல்பாறை தன்னைக் கவனிக்க நேரமின்றி 
ஆடைகுலைய அவசரமாய் ஓடிவந்தீர்! 
‘பாடைகுலையாதோ? பாவி அவன் மாளானோ?’
என்ற அமங்கலச் சொல் எங்கும் ஒலிக்குங்கால் 
நின்றுதான் வந்தீரா? நேர்வதையார் கண்டார்கள்? 
வந்த வழிபார்த்துச் செல்லுங்காண்! வையத்தில் 
எந்த மனிதர்க்கும் துன்பம்வரில் இப்படித்தான்!”

புதுவைப் பாட்டாளி வர்க்கமே! 

உன்னுடைய கைகளிலே எஃகின் உரமுண்டு! 
மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு! 
சோஷலிசம் பேசிச் சுரண்டலுக்குக் கால்பிடிப்போர் 
வேஷங் கிழித்தெறியும் வீரமுண்டு; வன்மையுண்டு! 
அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக! 
இன்றைக்கே போர் முரசம் எண்டிசையும் கேட்கட்டும்!

நாங்கள், 

இங்கு வருகின்ற எண்ணற்ற தாக்குதலை 
சங்காரம் செய்வோம்! ‘ஜயங்கொண்டார்’ 

ஆகிடுவோம்!ஆகையால் நீ தளர்வுறாதே 

முன்கை எடுத்திடுவாய்! முன்னேறித் தாக்கிடுவாய்! 
நின் பெருமை வாழ்க! நிலைபெறுக சோஷலிசம்!

‘முன்னணி’ - 1949