பக்கம் எண் :

52தமிழ்ஒளி கவிதைகள்2

விழிகளிலே புரட்சியொளி; 
       சமுதா யத்தை
வீழ்த்துதற்குச் சதி செய்யும் 
       சழக்கர் தம்மைக்
குழிதோண்டிப் புதைத்தற்குத் 
       திரண்ட தோளில்
குவலயத்துப் பெருமையெலாம் 
       கண்டு கொண்டேன்!காதல், 

கலை, அறம் வளரும் 
       தியாக பூமி
கவிபொழியும் மழைபொழியும் 
       போக பூமி
சாதல்இல்லை; அதுவந்தால் 
       கவலையில்லை
தனிமனிதன், மனிதகுலத் 
       தாயாய் விட்டான்!

சொல்லி விட்டேன் சுருக்கத்தை” 
       என்று சொல்லித்
துணையாக மீண்டுமெனைத் 
       தொட்ட நெஞ்சாம்
மெல்லியளை மார்போடும் 
       அணைத்துக் கொண்டேன்
மேதினியில் தலையாய 
       இன்பம் பெற்றேன்!

‘முன்னணி’ - 1949