பக்கம் எண் :

58தமிழ்ஒளி கவிதைகள்2

சாந்தம் வளர்த்திடுவார் - மக்கள் 
       சக்தி வளர்த்திடுவார்!
வாய்ந்த அறம் வளர்ப்பார் - பொது 
       வாக மகிழ்ந்திடுவார்!

ஆக்கப்பணி புரிவார் - இனி 
       அல்லல் கெடுத்திடுவார்!
தூக்கமிலா தலையும் - பேயின் 
       தூதனே போய்விடு நீ !

போய்விடு போய்விடு நீ - உன்னைப் 
       போற்றும் மனிதரில்லை!
போய்விடு போய்விடுநீ - ஹிட்லர் 
       போய்விட்ட பாழுலகம்!

‘முன்னணி’ - 1949