பக்கம் எண் :

6தமிழ்ஒளி கவிதைகள்2

உங்களுடன் பிறந்தோர்கள் - பசை 
       ஒன்றுமில் லாதுபல் தேசங்கள் ஓடிச்
செங்கதிர் காயும் நிலத்தில் - உழைத் 
       தேங்கி ஓடாகவே தேய்ந்துவிட் டார்கள்!

ஆராய்ந்து பார்த்ததும் உண்டோ? - சில 
       ஆத்திரக் காரர்கள் செய்திட்ட சூதை?
தேராதிருப்பவர் காதில் - இதைச் 
       செப்பி முழக்கத்தைச் செய்திடுவீரே! 

‘ஜனநாயகம்’ - 1947