பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 7

பொதுவுடைமைப் பொங்கல்!

செங்கரும்பு போல்வளர்ந்த செந்நெல்-அதன்
தெள்ளரிசி யோடுசுவை சர்க்கரையும் பாலும்
பொங்குதுபார் வெண்ணிலவைப் போலே - உணர்வு
பொங்கியெழும் உழவர்குலம் வாழியஇக் காலே!

சிங்கஉடல் கொண்டதொழி லாளர் - எட்டுத்
திக்கினிலும் வெற்றிகொளப் பொங்குகவே பொங்கல்! 
தங்குதடை இல்லைஇனி மேலே - நம்
தாயகத்தில் பொங்குகவே பொதுவுடைமைப் பாலே!

உதவி : ஊ. கோவிந்தன்

குறிப்பு: தோழர் ஊ. கோவிந்தன் அவர்கள் 1948ல் வெளியிட்ட பொங்கல்
வாழ்த்து மடல்.