|
தொலை நோக்கிகள்
பாரதப் பாட்டுகள் பாடிடுவார் - கம்பன்
பாநயம் போற்றிடக் கூடிடுவார்
நேரினில் வாழும் கவிஞர்களை - இவர்
நேத்திரம் கொண்டுமே நோக்குகிலார்!
பாரதி பாடலைப் பாடுகிலார் - இவர்
பாரதி தாசனை நாடுகிலார்
சாரத் தமிழ்நயம் பேசிடுவார் - இந்தச்
சண்டிகள் நொண்டிக்கை வீசிடுவார்!
சிலப்பதி காரமென் றார்த்திடுவார் - எங்கள்
சேர னிளங்கோ வென் றேத்திடுவார்
கலகலெனக்கவி தானிசைக்கும் - இளங்
கவிஞரைக் காண மறுத்திடுவார்!
தொலைவி லிருந்தவர் நோக்குகிறார் - நாட்டில்
தோழமை கொள்ளட்டும் அக்கணமே
கலைகள் உயிருடைக் காவியங்கள் - தமைக்
காணுவர் தங்களின்
கண்ணெதிரே!
‘போர்வாள்’ - 1948
|