பக்கம் எண் :

மலரும் உள்ளம்107

ஊசி போன்ற முள்ளிலே
    உயர்ந்த ரோஜா மலருதே.
வீசி நல்ல மணத்தினை
    விரும்பி அணியச் செய்யுதே!

மோச மான இடத்திலும்
    மிகவும் நல்ல பொருளுண்டு
யோசிக் காமல் எவரையும்
    ஏள னம்நீ செய்வதேன்?