பக்கம் எண் :

108மலரும் உள்ளம்

கருங்கடல்

ஊஞ்சல் போல முன்னும் பின்னும்
    கருங்கடலே - நீயும்
ஓடி ஓடி வந்து போவாய்
    பெருங்கடலே.

நீல வர்ண மேகந் தானோ
    கருங்கடலே - இங்கே
நிழலை உன்மேல் வீசி யதோ
    பெருங்கடலே ?

கரையில் மண்ணை நீயே சேர்த்தாய்
    கருங்கடலே - அதனைக்
கடந்து செல்ல முயல்வ தேனோ
    பெருங்கடலே ?

உப்புத் தந்தே உணர்வ ளிக்கும்
    கருங்கடலே - நாங்கள்
உன்னை யென்றும் மறந்தி டோமே
    பெருங்கடலே.