பக்கம் எண் :

மலரும் உள்ளம்109

பரந்த உன்றன் அளவு போலக்
    கருங்கடலே - நாங்கள்
பரந்த எண்ணம் பெற்றி டுவோம்
    பெருங்கடலே.

தொண்டை மான்கள் என்றிட் டாலம்
    கருங்கடலே - மிக்கத்
துணிச்ச லோடு எதிர்த்து மோதும்
    பெருங்கடலே.

தோட்டி தொண்டை மானெ வர்க்கும்
    கருங்கடலே - நீயும்
தொட்டுப் பாதம் கழுவி நிற்பாய்
    பெருங்கடலே.

காற்றைத் தந்து மகிழ்ச்சி யூட்டும்
    கருங்கடலே - நாங்கள்
கரையை நோக்கி வரவே செய்யும்
    பெருங்கடலே.

முத்தை யெல்லாம் தோற்று விக்கும்
    கருங்கடலே - நல்ல
முத்துப் போன்ற எண்ணங் கொள்வோம்
    பெருங்கடலே.