பக்கம் எண் :

மலரும் உள்ளம்111

பெரிதாய் வளர்ந்துநிலா, தம்பி - இன்பப்
    பேரொளியை வீசுதடா தம்பி.
பெரியோர் தொடர்பும் அதுபோலே - மிக்க
    பெருமை வளர்க்குமடா தம்பி.

சிறிது சிறதாகத் தம்பி - நிலா
    தேய்ந்து மறையுமடா, தம்பி.
சிறியோர் தொடர்பும், தம்பி - அந்தத்
    தேய்பிறையைப் போன்றதடா, தம்பி.

துன்பம் இன்பம்இவைகள் போலே - நிலா
    தேய்ந்து வளர்ந்துவரும் தம்பி.
துன்பம் இல்லாவிடிலோ தம்பி - இங்கு
    இன்பமும் இல்லையடா, தம்பி.