ஆரம்பப் பள்ளியும்,
கல்லூரியும்
கல்லூரி :
உயிரெ ழுத்தும் மெய்யெ ழுத்தும்
ஒன்று ஒன்றாய்க் கூறியே
உயிரெ டுக்கும் பள்ளி யேஇவ்
வுலகில் நீதான் உயர்வோசொல்?
ஆரம்பப் பள்ளி :
பெரியோர், சிறியோர் என்ற பேதப்
பேச்சு ஏனோ? நண்பரே.
பெரிய கட்டி டத்தி னாலே
பெருமை வந்து சேருமோ?
கல்லூரி :
பட்டம் பலவும் பெற்றுச் சர்க்கார்
பதவி ஏற்று வாழவே
திட்ட மான கல்வி தன்னைத்
திறமை யோடு தந்ததார்?
|