பக்கம் எண் :

மலரும் உள்ளம்119

ஆ.பள்ளி :

கையி லுள்ள பணமும் போகக்
    கடனும் வாங்கி உன்னிடம்
பையன் பட்டம் பெறவே கொட்டிப்
    பலன் பெறாதோர் எத்தனை ?

கல்லூரி :

நாக ரிகம் என்ன தென்று
    நன்கு காட்டி மாந்தர்கள்
வேக மாக மொழியைக் கற்க
    வேண்டும் சக்தி தந்ததார்?

ஆ.பள்ளி :

கழுத்தில் "டை"யும், தலையில் "ஹேட்"டும்,
    காலில் "பூட்"ஸு ம் அணிவோரும்
எழுத்துக் கூட்டிக் கற்றி டாமல்
    எப்ப டிமுன் னேறினர்?

கல்லூரி :

என்னி டத்தில் பட்டம் பெற்றார் 
    எத்த னைபேர் தெரியுமோ?
எண்ணில் லாத பேர்க ளென்று
    ஏனோ அறிய வில்லைநீ?