குண்டு
குண்டு ! குண்டு ! உயிர்களைக்
கொண்டு, கொண்டு போகுதே !
சண்டை போடத் தானடா
கண்டார் இந்தக் குண்டுகள்.
வானம் மீது கப்பலில்
வந்து குண்டு போடுவார்.
ஈன மான புத்தியோ?
இரக்க மென்ப தில்லையோ ?
குழந்தை, குட்டி யாவரும்
குலைந டுங்க ஓடியே,
விழுந்து கெட்டு உயிர்களை
விடவோ இந்தக் குண்டுகள்?
கையும் காலும் போகவே
கஷ்ட முற்றோர் எத்தனை?
ஐயோ, பாவம் ! யாரிடம்
அவர்கள் அண்டி
வாழ்வதோ?
|