பக்கம் எண் :

மலரும் உள்ளம்157

திருடன் கண்டது?

திருடன் ஒருவன் இரவிலே 
    திருட எண்ணம் கொண்டனன்;
அருகில் உள்ள ஊரையே
    அடைந்து திருடச் சென்றனன்.

வயலின் நடுவே வழியினில் 
    மனிதன் நிற்கக் கண்டனன்;
பயந்து அங்கே நின்றனன் ;
    பதுங்கி மறைவில் ஒளிந்தனன்.

அந்த மனிதன் நடுவிலே
    அசைந்தி டாமல் நிற்கவே.
"எந்த வழியில் செல்வது?"
    என்று எண்ணிப் பார்த்தனன்!

போக வழியும் இல்லையே!
    பொறுமை பறந்து போனதே!
வேக மாகத் தடியுடன்
    "விறுவி"ரென்று சென்றனன்.