தடியால் அந்த மனிதனைத்
தலையில் ஓங்கி அடித்தனன்.
அடிமேல் அடியும் வைத்தனன்.
ஆனால், அந்த மனிதனோ-?
தாக்க வந்த திருடனைத்
தடுத்து விடவும் இல்லையே!
ஊக்க மாகத் திருப்பியே
உதைக்கத் தானும் இல்லையே!
"குய்யோ! முறையோ!" என்றுமே
குதித்து ஓட வில்லையே!
"ஐயோ!" என்று அலறியே
அழவும் இல்லை, இல்லையே!
அடித்து, அடித்துக் கையுமே
அலுத்துப் போன திருடனும்
"தடித்த தோலை உடையவன்
தடியன் இவனும் யா"ரெனக்
கிட்டச் சென்று வேகமாய்த்
தொட்டுப் பார்த்தான். பார்த்ததும்,
வெட்கப் பட்டுச் சிரித்தனன்.
விஷயம் என்ன, தெரியுமோ?
|