பக்கம் எண் :

194மலரும் உள்ளம்

"வெந்நீர் ஒத்த டத்தினால்
    விலகும் நாயின் வலியுமே"
என்று அவளும் எண்ணினள்.
    இதற்குத் துணியும் வேண்டுமே!

சுற்று முற்றும் பார்த்தனள்.
    துணியைக் காணோம்! ஆதலால்
சட்டை தன்னைப் பாதியாய்த்
    தயக்க மின்றிக் கிழித்தனள்.

சுட்ட நீரில் துணியினைத்
    தோய்த்துத் தோய்த்துக் கல்லடி
பட்ட காலில் ஒத்தடம்
    பையப் பையக் கொடுத்தனள்.

காலில் வலியும் குறைந்தது.
    களிப்புக் கொண்டு நாயுமே
வாலை ஆட்ட லானது.
    மகிழ்ந்தாள், அந்தச் சிறுமியும்.

கதையில் சொன்ன சிறுமி யார்?
    கண்டு பிடிக்க முடியுமோ?
அதையும் நானே சொல்லவா,
    அன்பு மிக்க பிள்ளைகாள்?