பக்கம் எண் :

மலரும் உள்ளம்207

எனது சொல்லைக் கேட்டிடுவாய்.
எளிதில் காரியம் முடிந்துவிடும்.

வண்டியை அருகே நிறுத்திடுவாய்;
மரத்தை அடியில் வெட்டிடுவாய்.

வெட்டிய மரத்தை வண்டியிலே
வீழ்ந்திடும் படிக்குச் செய்திடுவாய்.

எப்படி எனது யோசனை? சொல்”
என்றே வேலன் கேட்டிடவே,

"சரி,சரி" என்றே அம்மனிதன்,
தலையை ஆட்டி மகிழ்வுடனே,

வண்டியை அருகில் நிறுத்தினனே;
மரத்தை வெட்டிச் சாய்த்தனனே.

"பட,பட" என்ற சத்தமுடன்
"பட்"டென மரமும் சாய்ந்ததுவே.

மரத்தின் பளுவைத் தாங்காமல்
வண்டியும் "அப்பளம்" ஆனதுவே!