பக்கம் எண் :

210மலரும் உள்ளம்

ஐயோடா!

பூவின்மீது வண்ணாத்திப்
    பூச்சி ஒன்றடா - அதைப்
பிடிக்கஎண்ணித் துணியைமேலே
    போட்டே னேயடா.

என்னை அதுவும் ஏய்த்துவிட்டுப்
    பறந்து போச்சடா - உடன்,
எனதுதுணியை வேகமாக
    இழுத்தே னேயடா.

செடியில்மாட்டிக் கொண்டுதுணியும்
    கிழிந்து போச்சடா - இது
தெரிந்துபோனால், அப்பாஎன்னை
    அடிப்பார், ஐயோடா!