பக்கம் எண் :

மலரும் உள்ளம்211

மூக்கும் மணமும்

பூக்கள் விற்கும் கடையருகே
    போனேன். உடனே அடடாவோ!
மூக்கில் வாசனை புகுந்ததுவே,
    முகத்தில் இன்பம் பொங்கியதே.

"பத்து விரல்கள் படைத்ததுபோல்
    பற்பல மூக்கைப் படைத்திருந்தால்
இத்தனை மணமும் மூக்கினுள்ளே
    இழுத்திட லாமே" என நினைத்தேன்.
*

சாக்கடை தங்கிய வீதியிலே
    சற்றே ஒருநாள் நடந்திடவே
மூக்கைத் துளைத்தது, துர்நாற்றம்.
    முகமும் சுருங்கிப் போனதுவே!

"மூக்கே இல்லா திருந்திட்டால்,
    மிகமிக நல்லது" என்றெண்ணி
மூக்கைப் பிடித்துக் கொண்டேநான்
    மும்முர மாக நடந்தேனே!