படுக்கும் கட்டில், மெத்தைகள்,
பாய்கள், பெஞ்சு யாவிலும்
இடுக்கில் இருந்து கொண்டுநீ
என்னைக் கடித்து விடுகிறாய்.
இலையைப் போல இருந்தநீ
"இட்லி" போலப் பருக்கிறாய்.
கொலைதான் செய்யப் போகிறேன்,
கொடிய மூட்டைப் பூச்சியே !
சேவலே எழுந்திரு!
கொண்டைச் சேவல், கொண்டைச் சேவல்,
எழுந்திருப்பாயே.
"கொக்க ரக்கோ!" என்று நீயும்
கூவிடுவாயே!
உறங்கு கின்ற சேவ லேநீ
எழுந்திருப்பாயே.
உதித்து விட்டான், சூரியனும்.
கூவிடுவாயே!
|