பக்கம் எண் :

மலரும் உள்ளம்47

விடுமுறைக் கடிதம்

அன்புடைய ஆசிரியர்
அவர்களுக்கு, என்வணக்கம்.

காலைமுதல் தலைவலியால்
கஷ்டமிகப் படுகின்றேன்.

பள்ளிக்கு வந்திடவோ,
பாடத்தைப் படித்திடவோ

இன்றைக்கு முடியாமல்
இருப்பதனால் அன்புடையீர்.

தயைகூர்ந்து இன்றுமட்டும்
தருவீர்கள், விடுமுறைதான்.

இப்படிக்குப் பணிவுள்ள,
இன்பவல்லி
2-ம் படிவம். "இ" பிரிவு.