பக்கம் எண் :

64மலரும் உள்ளம்

மல்லிகை

முத்துப் போல மல்லிகை
       முற்றும் அழகு காட்டுதே.
நித்தம் பெண்கள் தலையிலே,
       நின்று நடனம் ஆடுதே!

எங்கு ஒளித்து வைப்பினும்,
       எளிதில் அறியச் செய்யுதே,
"இங்கு நானும் இருக்கிறேன்"
       என்று மணத்தைப் பரப்புதே!

கண்ணைக் கவரச் செய்யுதே,
       காற்றில் மணத்தைக் கலக்குதே,
பெண்கள் தலையில் அணிந்ததும்
       பெருமை கொள்ளச் செய்யுதே.

"கொண்டை தன்னில் அணியவே
       கொடுத்து வைக்க வில்லையே"
என்று ஆண்கள் எண்ணியே
       ஏங்கச் செய்யும் பூவிதே!