பக்கம் எண் :

மலரும் உள்ளம்65

கடற்கரை

வா

கடற்க ரைக்குச் சென்றிடலாம்
       வா, தம்பி, வா - அங்கே
காற்று வாங்கி வந்திடலாம்,
       வா, தம்பி, வா.

உடல் வளர நல்லதடா
       வா, தம்பி, வா - அந்த
உப்பங் காற்றின் சக்தியடா
       வா, தம்பி, வா.

வெள்ளை மணல் மீதிருப்போம்
       வா, தம்பி, வா - சற்றே
விளை யாடித் திரும்பிடுவோம்
       வா, தம்பி, வா.

பிள்ளை களும் வந்திடுவார்
       வா, தம்பி, வா - அங்கே
பெரிய வரும் கூடிடுவார்
       வா, தம்பி, வா.