பார்
கடலின் மீது செல்லும்
கப்பல்
பார், தம்பி, பார் -
அதைக்
காணப் பலர் வருவதையே
பார், தம்பி, பார்.
"தடத"டென்று அலைகள் வந்து
பார், தம்பி, பார் -
காலைத்
தழுவி விட்டுப் போவதையே
பார், தம்பி, பார்.
சங்கும் நல்ல கிளிஞ்சல்களும்
பார், தம்பி, பார் -
இங்கே
சரள மாகக் கிடைக்குதடா
பார், தம்பி, பார்.
பொங்கு கின்ற பாலினைப்போல்
பார், தம்பி, பார் -
இங்கு
தங்கி நிற்கும் நுரையுமுண்டு
பார், தம்பி, பார்.
|