பக்கம் எண் :

மலரும் உள்ளம்67

கேள்

முத்து நல்ல முத்துக்களாம்
       கேள், தம்பி, கேள் - உள்ளே
மூழ்கி, மூழ்கி எடுத்திடுவார்
       கேள், தம்பி, கேள்.

எத்த னையோ மீன்வகைகள்
       கேள், தம்பி, கேள் - இங்கே
எண்ண யாரால் முடியுமென்றே
       கேள், தம்பி, கேள்.

மழையே பெய்யா திருந்திடினும்,
       கேள், தம்பி, கேள் - கடல்
வரண்டு போவ தில்லையடா
       கேள், தம்பி, கேள்.

அலைகள் போடும் சத்தமடா
       கேள், தம்பி, கேள் - அதை
அடக்க யாரால் முடியுமென்றே
       கேள், தம்பி, கேள்.