கூனாய்க் குருடாய் இல்லாமல்,
கூப்பிடும் குரலைக் கேட்பவனாய்
இருந்தும் நல்ல குணம் எதுவும்
இல்லா திருந்தால் என்னபயன்?
அம்மா மகிழ்ச்சி கொள்ளுவாளோ?
அதிகத் துயர்தான் அடைந்திடுவாள்.
* * *
"பத்து மாதம் சுமந்தென்ன?
பாடு பட்டு வளர்த்தென்ன?
எத்தனை கஷ்டப் பட்டென்ன?
இதுபோல் பிள்ளை இருக்கிறதே!"
என்றே எண்ணி வருந்திடுவாள்;
என்றும் கவலை கொண்டிடுவாள்.
|
|
|