பக்கம் எண் :

தேசிய கீதங்கள்


பாரத நாடு

வெறிகொண்ட தாய்


பேயவள் காண் எங்கள் அன்னை -- பெரும்      பித்துடையள் எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன் தனைக்
     காதலிப்பாள் எங்கள் அன்னை.

(பேயவள்)

1

இன்னிசை யாம் இன்பக் கடலில் -- எழுந்து
     எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள் -- அங்குத்
     தாவிக் குதிப்பாள் எம் அன்னை.(பேயவள்)


2


தீஞ்சொற் கவிதையஞ் சோலை -- தனில்
     தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி -- மதுத்
     தேக்கி நடிப்பள் எம் அன்னை.(பேயவள்)3


வேதங்கள் பாடுவள் காணீர் -- உண்மை
     வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி -- உணர்ந்
     தோதி யுலகெங்கும் விதைப்பாள்.


(பேயவள்)

4

பாரதப் போரெனில் எளிதோ? -- விறற்
     பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாளே
மாரதர் கோடிவந் தாலும் -- கணம்
     மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.
(பேயவள்)
5