பாரத
நாடு
ஜாதீய கீதம்-2
(புதிய மொழிபெயர்ப்பு)
|
நளிர்மணி நீரும், நயம்படு
கனிகளும்
குளிர்பூந் தென்றலும், கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை, வாழிய அன்னை! |
(வந்தே) |
1 |
\பு{[குறிப்பு]: முன்னொரு முறை முழுதும்
அகவலாக ஒரு மொழிபெயர்ப்பு எழுதியிருந்தேன். ஆனால், அது பாடுவதற்கு நயப்படாதாகையால்
இப்போது பல சந்தங்கள் தழுவி மொழிபெயர்த் தெழுதப்பட்டிருக்கின்றது.
-- பாரதியார்} |
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும், தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை.
|
(வந்தே) |
2 |
கோடி
கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை, என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை.
|
(வந்தே) |
3 |
அறிவுநீ,
தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ,
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.
|
(வந்தே) |
4 |
தபத்து
படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
|
(வந்தே) |
5 |
திருநி
றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை,
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை,
பெருகு மின்ப முடையை, குறுநகை
பெற்றொளிர் ந்தனை, பல்பணி பூண்டனை,
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்ந (வந்தே)
|
(வந்தே) |
6 |
பிற்சேர்க்கை
ஜாதீய கீதம்
பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர்
வங்காளியில் இயற்றிய “வந்தே மாதரம்” கீதம்.
|
சூஜலாம், சூபலாம் மலயஜ ஸ்ரீதலாம்
சஸ்ய ஸ்யாமலாம் மாதரம். |
(வந்தே) |
|
சூப்ர
ஜ்யோத்ஸ்நா புலகித யாமிநீம்
புல்ல குசூமித த்ரும தள சோபிநீம்
சூஹாசிநீம், சூமதுர பாஷைநீம்
சூகதாம், வரதாம். மாதரம்
|
(வந்தே) |
1 |
ஸப்த
கோடி கண்ட கலகல நிநாதக ராலே
த்விசப்த கோடி புஜைர் த்ருத கரகர வாலே
கே போலே, மா துமி அபலே
பஹூபல தாரிணீம், நமாமி தாரிணீம்
ரிபுதள வாரிணீம், மாதரம்
|
(வந்தே) |
2 |
துமி
வித்யா, துமி தர்ம,
துமி ஹருதி, துமி மர்ம,
த்வம்ஹி ப்ராணா: சரீரே
பாஹூதே துமி மா சக்தி
தொமா ரேயி ப்ரதிமா கடிமந்திரே மந்திரே
|
(வந்தே) |
3 |
த்வம்
ஹி துர்கா தசப்ரஹாரண தாரிணீ
கமல கமலதல விஹாரிணீ
வாணி வித்யா, தாயிநீ, நமாமி த்வாம்
|
(வந்தே) |
4 |
நமாமி,
கமலாம், அமலாம் அதுலாம்
சூஜலாம், சூபலாம் மாதரமர்
ஸ்யாமலாம், சரலாம், சூஸ்மிதாம் ஷிதாம்
பரணீம், தரணீம், மாதரம்
|
(வந்தே) |
5 |
|
|
|