காப்பு
நித்தரெனும் தென்னிளசை நின்மலனார்
தாம்பயந்த
அத்திமுகத் தெங்கோ ளடியிணையே -- சித்திதரும்
என்தமிழி லேது மிழுக்கில்லா மெயஃது
நன்றாகு மென்றருளும் நன்கு.
|
நூல்
|
தேனிருந்த சோலைசூழ்
தென்னிளசை நன்னகரின்
மானிருந்த கையன் மலரடியே -- வானிற்
சுரர்தமனியன்மால் தொழுங்காற் கிரீடத்
தரதனங்கள் சிந்து மகம். |
1 |
அகவிடத்திற் கோர்திலக மாமென் னிளசைப்
பகவனென் னெட்டீசன் பதமே -- திகிரி
பொருந்துகரத் தானென்றோர் போத்திரியாய்த் தேடி
வருந்தியுமே காணாச் செல்வம். |
2 |
12. ஆதாரம்: சக்தி வெளியீடு -- பக்கம்
475 -- 476
|
செல்வ மிரண்டுஞ்
செழித்தோங்குந் தென்னிளசை
யில்வளரும் ஈசன் எழிற்பதமே -- வெல்வயிரம்
ஏந்துகரத் தான்கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்
போந்துவளர் கின்ற பொருள். |
3 |
பொருளாளரீய வேற்போரிளசை
மருளாள நீச ரடியே -- தெருள்சேர்
தமனா மறையவன்மேற் றன்பாச மிட்ட
சமனாவி வாங்கும்பா சம். |
4 |
சங்கத் தவழ்கழனி தண் இளசை நன்னகரில்
எங்கள் சிவனார் எழிற்பதமே-துங்கமிகும்
வேதமுடியின் மிசையே விளங்குநற்
சோதியென நெஞ்சே துணி. |
5 |
துணிநிலவார் செஞ்சடையன் தோள் இளசை ஊரன்
மணிகண்டன் பாதமலரே -- பிணிநரகில்
வீழச்செய் யாது விரும்பியஈந் தேஅடியர்
வாழச்செய் கின்ற மருந்து.
|
6 |
மருளறக் கற்றோர்கண் மருவிளசை ஊரில்
வருமிறைவன் பாத மலரே -- திருவன்
விரைமலரா வட்டவிழியாம் வியன்றா
மரைபூத்த செந்தா மரை.
|
7 |
தாமரையின் முத்தெங்குந் தான்சிதறுந் தென்னிளசைக்
கோமானெட் டீசன்மலர் கொள்பதமே -- நாமவேல்
வல்லரக்கன் கைலை வரையெடுத்த காலவனை
அல்லற் படவடர்த்த தால். |
8 |
ஆல விழியா ரவர்முலைநேர் தண்வரைசூழ்
கோல மணி இளசைக் கோன்பதமே -- சீல
முனிவர் விடுத்த முயலகன் மீதேறித்
தனிநடனஞ் செய்ததுவே தான். |
9 |
தானே பரம்பொருளாந் தண்ணிளசை யெட்டீசன்
தேனேய் கமலமலர்ச் சீரடியே -- யானேமுன்
செய்தவினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கியருள்
எய்திடவுஞ் செய்யும் எனை. |
10 |
தனி
|
கன்னனெனும் எங்கள்
கருணைவேங்க டேசுரட்ட
மன்னவன் போற்றுசிவ மாணடியே -- அன்னவனும்
இந்நூலுந் தென்னாரிளசையெனும் நன்னகரும்
எந்நாளும் வாழவைக்கு மே. |
11 |