| அருவிபோலக்
கவி பொழிய -- |
எங்கள்
அன்னை பாதம் பணிவேனே |
1 |
| குருவிப்
பாட்டை யான்பாடி -- |
அந்தக்
கோதைபாதம் பணிவேனே. |
கேள்வி
|
| சின்னஞ்சிறு
குருவி -- |
நீ
செய்கிற வேலையென்ன? |
2 |
| வன்னக்
குருவி -- |
நீ
வாழும் முறை கூறாய்! |
குருவியின்
விடை
|
| கேளடா
மானிடவா -- |
எம்மில்
கீழோர் மேலோர் இல்லை |
3 |
| மீளா
அடிமை யில்லை -- |
எல்லோரும்
வேந்தரெனத் திரிவோம். |
13. ஆதாரம்: பாரதி புதையல் 1
-- பக்கம் 22. 1935-ல் எட்டயபுரத்தில்
வெளியான ‘மணிமுத்துப் புலவர் பாடல்’ என்ற நூலில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
|
14.
ஆதாரம்: பாரதி புதையல் 1 -- பக்கம் 14-17 புதுவை ‘பாரதி அன்பன்’ 23-10-1946
இதழ்.
|
| உணவுக்குக்
கவலையில்லை -- |
எங்கும்
உணவு கிடைக்குமடா |
4 |
| பணமும்
காசுமில்லை -- |
எங்குப்
பார்க்கினும் உணவேயடா! |
|
| சிறியதோர்
வயிற்றினுக்காய் -- |
நாங்கள்
ஜன்ம மெல்லாம் வீணாய் |
5 |
| மறிகள்
இருப்பதுபோல் -- |
பிறர்
வசந்தனில் உழல்வதில்லை. |
|
| காற்றும்
ஒளியுமிகு -- |
ஆகாயமே
எங்களுக்கு |
6 |
| ஏற்றதொரு
வீடு -- |
இதற்கெல்லை
யொன்றில்லையடா! |
|
| வையகம்
எங்குமுளது -- |
உயர்வான
பொருளெல்லாம் |
7 |
| ஐயமின்
றெங்கள் பொருள் -- |
இவைஎம்
ஆகார மாகுமடா. |
|
| ஏழைகள்
யாருமில்லை -- |
செல்வர்ஏறியோர்
என்றுமில்லை |
8 |
| வாழ்வுகள்
தாழ்வுமில்லை -- |
என்றும்
மாண்புடன் வாழ்வமடா. |
|
| கள்ளம்
கபடமில்லை -- |
வெறும்
கர்வங்கள் சிறுமையில்லை |
9 |
| எள்ளற்குரிய
குணம் -- |
இவை
யாவும் உம் குலத்திலடா. |
|
| களவுகள்
கொலைகளில்லை -- |
பெருங்
காமுகர் சிறுமையில்லை |
10 |
| இளைத்தவர்க்கே
வலியர் -- |
துன்பம்
இழைத்துமே கொல்லவில்லை. |
|
| சின்னஞ்சிறு
குடில்லி -- |
மிகச்
சீரழி வீடுகளில் |
11 |
| இன்னலில்
வாழ்ந்திடுவீர் -- |
இது
எங்களுக்கு இல்லையடா. |
| [பாட
பேதம்]: செல்வம் ஏறியோர்} |
|
| பூநிறை
தருக்களிலும் -- |
மிகப்
பொலிவுடைச் சோலையிலும் |
12 |
| தேனிறை மலர்களிலும் -- |
நாங்கள்
திரிந்து விளையாடுவோம். |
|
| குளத்திலும்
ஏரியிலும் -- |
சிறு
குன்றிலும் மலையினிலும் |
13 |
| புலத்திலும்
வீட்டினிலும் -- |
எப்
பொழுதும் விளையாடுவோம். |
|
| கட்டுகள்
ஒன்றுமில்லை -- |
பொய்க்
கறைகளும் ஒன்றுமில்லை |
14 |
| திட்டுகள்
தீதெங்கள் -- |
முதற்
சிறுமைகள் ஒன்றுமில்லை. |
|
| குடும்பக்
கவலையில்லை -- |
சிறு
கும்பித்துயருமில்லை |
15 |
| இடும்பைகள்
ஒன்றுமில்லை -- |
எங்கட்
கின்பமே என்றுமடா. |
|
| துன்பமென்றில்லையடா
-- |
ஒரு
துயரமும் இல்லையடா |
16 |
| இன்பமே
எம் வாழ்க்கை -- |
இதற்கு
ஏற்றமொன்றில்லையடா. |
|
| காலையில்
எழுந்திடுவோம் -- |
பெருங்கடவுளைப்
பாடிடுவோம் |
17 |
| மாலையும்
தொழுதிடுவோம் -- |
நாங்கள்
மகிழ்ச்சியில் ஆடிடுவோம். |
|
| தானே
தளைப்பட்டு -- |
மிகச்
சஞ்சலப்படும் மனிதா |
18 |
| நானோர்
வார்த்தை சொல்வேன் -- |
நீமெய்ஞ்ஞானத்தைக்
கைக்கொள்ளடா. |
|
| விடுதலையைப்
பெறடா -- |
நீ
விண்ணவர் நிலைபெறடா |
19 |
| கெடுதலை
ஒன்றுமில்லை -- |
உன்
கீழ்மைகள் உதறிடடா. |
|
| இன்பநிலை
பெறடா! -- |
உன்
இன்னல்கள் ஒழிந்ததடா |
20 |
| துன்பம்
இனியில்லை -- |
பெருஞ்
சோதி துணையடா. |
|
| அன்பினைக்
கைக் கொள்ளடா -- |
இதை
அவனிக்கிங்கு ஓதிடடா |
21 |
| துன்பம்
இனியில்லை -- |
உன்
துயரங்கள் ஒழிந்ததடா. |
|
| சத்தியம்
கைக்கொள்ளடா -- |
இனிச்
சஞ்சலம் இல்லையடா |
22 |
| மித்தைகள்
தள்ளிடடா -- |
வெறும்
வேஷங்கள் தள்ளிடடா. |
|
| தர்மத்தைக்
கைக்கொள்ளடா -- |
இனிச்
சங்கடம் இல்லையடா. |
23 |
| கர்மங்கள்
ஒன்றுமில்லை -- |
இதில்
உன் கருத்தினை நாட்டிடடா. |
|
| அச்சத்தை
விட்டிடடா -- |
நல்
ஆண்மையைக் கைக்கொள்ளடா |
24 |
| இச்
சகத்தினிமேலே நீ -- |
என்றும்
இன்பமே பெறுவையடா. |