தோத்திரப் பாடல்கள்
மஹாசக்தி வெண்பா
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம்-பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண், நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு.