|
தெளிவு
|
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? -- மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ? |
1 |
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? -- மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா? |
2 |
சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால், -- மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ? |
3 |
[பாட
பேதம்]: 'கண்டபின்'
பா.க.-9
-- 1910 ஆம் வருடப் பதிப்பு |
|