பக்கம் எண் :

நாம் தமிழர் என்று பாடு

நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம்
தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு!

மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்
முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு!






( 5 )





( 10 )

நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்றுபாடு
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு?-தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!

முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு-நீ
முன்னே்றுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா?
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு

தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு-நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு-தமிழர்
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!


( 15 )





( 20 )

ஒற்றுமைப் பாட்டு!

(ஆனந்தக் களிப்பு மெட்டு)

மக்கள் நலத்துக்கு மதமா?-அன்றி
மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர்! -மக்கள்...

திக்கெட்டும் உள்ளவர் யாரும்-ஒன்று
சேராது செய்வதே மதமாகுமானால்
பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும்-அப்
பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்,
எக்கட்சி எம்மதத்தாரும்-இங்
கெல்லாரும் உறவினர் என்றெண்ண வேண்டும் -மக்கள்...
எல்லா மதங்களும் ஒன்றே-அவை
எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே
சொல்லால் முழங்குவது கண்டீர்-அவை
துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ?
எல்லாரும் மக்களே யாவர்-இங்
கெல்லாரும் நிகராவார் எல்லாரும் உறவோர்
எல்லாரும் ஒரு தாயின் செல்வர்-இை
எண்ணாத மக்களை மாக்களென்போமே! -மக்கள்...

( 25 )





( 30 )




( 35 )




( 40 )

வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே-நல்
வழிகாட்டியான பின் வழிகாட்டிடாமல்
பழிகூட்ட வைத்திருப்பீரோ? நீர்
பகைகூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?
பிழியாக் கரும்பினிற் சாற்றை-நீர்
பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே
அழிவைப் புரிந்திடுதல் நன்றோ?-நல்
அன்பால் வளர்ந்திடுக இன்ப நல்வாழ்வை -மக்கள்...




( 45 )

கொட்டா முரசம் !

நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!

நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிட்டோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!


( 50 )





( 55 )

நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள்
நாம்! நாம்தமிழர் என்று முரசறைவாய்
முத்துப்பல் பகைப்படை நம் படை முன்னிற்க
முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்!

நந்தமிழ்த் தாய்க்கெதிர் இந்திக்கும் ஆட்சியா!
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய்
வந்தவர் போயினார் செந்தமிழ்ச் செல்வமே
மணிமுடி புனைந்தனள் கொட்டடா முரசம்!



( 60 )

மிடிமை தீரக் கடமை புரிவீர்

காலை மலர்ந்தது செங்கதிர் எழுந்தான்
கண் மலர்வீரே உலகினில் மாந்தரே!
வேலை தொடங்குவீர் மெய்யான வழியில்
விருப்பமும் குறிப்பும் அறமெனக் கொள்வீர்

ஆலையிற் கரும்புபோல் வாடினர் பல்லோர்
அவர்களை மீட்டல் அறத்தின் முதன்மையாம்
சோலையிற் குயில்கள் பாடி நலஞ் செயும்
துளிரன்றி ஆயிரம் தேடுவதில்லையே!

( 65 )





( 70 )

மக்களை நடத்தும் சட்டமும் நடப்பும்
மாய்த்திடும் பசிநோய் வளர்த்திடல் அறிந்தீர்!
தக்கது நாடி ஒற்றுமை வலியினால்
தகர்த்திட வேண்டிக் கொதித்திடு வீர்கள்!
கொக்கும் இரைபெற இருந்திடும்; வந்தால்
கொத்திடத் தயங்கிப் பசித்திடல் உண்டோ!
கைக்குள் கொண்டுளீர் மீட்சி மருந்தினைக்
கடமை புரிகுவீர் எழுக தொண்டரே!


( 60 )




( 80 )

எவன் தமிழன்?

தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு
சமையல் அறையின் முள்ளங்கித் தண்டு
தமிழைத் தமிழன் தாய் என்பதாலும்
தமிழ் பழித்தானை அவன் நாய் என்பதாலும்
                          (-தமிழனை எதிர்க்கும்...)

தமி்ழ்த்தாய் வாடந்தான் வாழ்வதென்பது
தமிழனால் சற்றும் பொறுக்க ஒவ்வாதது
தமிழைத் தமிழன் மறந்து தெப்போது
சாவதும் வாழ்வதும் தமிழுக்கே என்றோது
                          (-தமிழனை எதிர்க்கும்...)





( 85 )





( 90 )

மெத்தை வீடு கட்டிப் புலாற்சோறு
வழங்குவதல்ல அவன் வேண்டும் பேறு
முத்தமிழ் காத்துப் பகைவனை ஒருவாறு
முடிப்பது தான் முடிவாம் என்று கூறு  
                        (-தமிழனை எதிர்க்கும்...)

ஒரு நாட்டு மொழியினை ஒழிப்பவன் எண்ணம்
ஒழிந்தது போகுமுன் ஏற்படும் எண்ணம்
பருந்து பறக்க வேண்டுவது திண்ணம்
பறக்கா விட்டால் தெரியும் கைவண்ணம்.
                        (-தமிழனை எதிர்க்கும்...)




( 95 )





( 100 )

மாணவர் ஒற்றுமை

ஆரிய ஆசான் பேரைச் சொல்லி
அழைக்க அதற்குத் தமிழ்மா ணாக்கன்
உள்ளேன் ஐயா என்றே உரைத்தான்
அப்படிச் சொல்லல் தப்படா என்ற
இழிஞனை எதிர்த்த துண்டா மாணவன்?

தாயாம் தமிழில் கையெழுத் திடும்படி
சேயாம் மாணவன் தெரிவித்த போது
வடமொழியிற் றான் கையெழுத்து வைப்பேன்
என்று பலபடி இழித்துப் பேசிய
மாபாவி தன்னை அந்த மாணவன்
எதிர்த்த துண்டா? இல்லவே இல்லை.

எதுதான் வடசொல்? எதுதான் தமிழ்ச்சொல்?
என்று வினாவிய எளியமா ணவனை
எதிர்த்த இழிஞனை அந்த மாணவன்
எதிர்த்த துண்டா? இல்லவே இல்லை!





( 105 )





( 110 )





( 115 )

வடமொழி உயர்ந்தது தமிழ்மொழி தாழ்ந்ததே
என்ற பள்ளி ஆசிரியன் தனை
எந்த மாணவன் எதிர்த்தான் இதுவரை?
வடசொலி னின்றே தமிழ்ச்சொல் வந்ததாம்
என்ற மடையனை எந்த மாணவன்
எதிர்த்தான் இதுவரை? இல்லவே இல்லை!

தம்மினத்தைத் தம்தாய் மொழியை
தாக்கினோ னுக்கும் அவனைத் தாங்கிய
தலைமை ஆசான் தனக்கும் அஞ்சும்
மாணவர் எல்லாம் மானமிழந்தவர்!


ஆனால் அந்த மாணவர் இந்நாள்
ஒற்றுமை பெறுவதை ஊக்க வேண்டும்!
பச்சை யப்பன் பள்ளி மாணவர்
ஒன்று பட்டுக் கேட்ட வசதியை
இன்றே செய்து தருவது சிறந்ததே!





( 120 )





( 125 )





( 130 )

தூங்கும் புலி எழுந்தது!

தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம் -தூங்கும்

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் -தூங்கும்

பண்டைப் பெரும் புகழ் உடையோமா? இல்லையா!
பாருக்கு வீரத்தைச் சொன்னோமா? இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா, இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? -தூங்கும்







( 135 )

தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க் குயிர் தர இசைந்தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா? -தூங்கும்

செந்தமிழ் நெஞ்சம் கொதித்தா, இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா, இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா? -தூங்கும்
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா, இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா? -தூங்கும்

( 140 )





( 145 )




( 150 )

புலிக்கு நாய் எந்த மூலை!

தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம்
தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்

தமிழ் நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை?
தாவும் புலிக்கொரு நாய் எந்த முலை?

தூங்கிய துண்டு தமிழர்கள் முன்பு-பகை
தூளாகும் அன்றோ எழுந்த பின்பு?
தீங்கு புரிகின்ற வடக்கரின் என்பு
சிதைந்திடச் செய்திடும் தமிழரின் வன்பு.

அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க-மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!
துவளாத வாழ்க்கை உலகெலாம் சூழ்க!
தூக்கிய கைகள் அறம் நோக்கித் தாழ்க!







( 155 )





( 160 )

தமிழனுக் குலகம் நடுங்கியதுண்டு-அங்குத்
தன்னாட்சி நிறுவிட எண்ணியதுண்டா?
தமதே என்று பிறர் பொருள் கொண்டு
தாம் வாழ எண்ணினோர் எங்குளார் பண்டு!


( 165 )

சீனாக்காரன் தொலைந்தான்

சீனாக்காரன் தானே வந்தான் போருக்கு-நம்
சிறுத்தைக் கூட்டம் வேறே இங்கே யாருக்கு?
போனால் கிடைக்கும் போரில் -அந்தச்
சீனாக்காரன் ஈரல்!

போர்க்களத்தில் சீனனுக்கா எக்காளம்?- உடன்
புறப்படட்டும் அங்கே வேங்கைப் பட்டாளம்!
பார்க்கட்டும் அக் கொதுகு-நன்றாய்ப்
பழுக்கட்டும் அவன் முதுகு!

சீனனுக்கே இங்கே என்ன வேலை?- நம்
சிங்கப்படை கிழிக்கட்டும் அவன் தோலை
தானே வந்தான் கொழுத்து-தன்
தலை இழந்தது கழுத்து!




( 170 )






( 175 )

தேனாய்ப் பேசித் திடீரென்று பாய்ந்தான்-நம்
ஆனைப்படை கண்டுமனம் ஓய்ந்தான்
சீனா இனி இல்லை-இனிப்
போனதவன் தொல்லை.

நாடுபிடிக்கச் சீனா செய்த வஞ்சகம்-மிக
நன்றாகவே தெரிந்து கொண்டது வையகம்
கோடு தாண்டப் பார்த்தான்-தன்
கொடியை எரித்துத் தீர்த்தான்.

( 180 )





( 185 )

அழைப்பு

கட்டாயம் வீட்டுக்கொரு சிங்கம் புறப்படட்டும்
கொட்டடா வெற்றிமுர செங்கும்-அச்சமில்லாமல்
இட்டான் எல்லையிற் காலைத்
தொட்டான் துப்பாக்கிக் கோலைச்

சுட்டான் சீனன்தன் னாலே
கெட்டான் கெட்டான் என்று -கட்டாய

நட்டாரைப் போலவேந டந்தான்-அதன்பிறகு
நாட்டைப் பிடித்திடமு னைந்தான்-நாணயமின்றிப்
பட்டாளம் சேர்த்திடமு னைந்தான்-நம்பாரதந்தன்
பாட்டன் நிலமென்று பகர்ந்தான்-உணர்ந்தெழுந்து
சுட்டுத் தொலைக்கத் திட்டம் போட்டோம்-அடுத்தபடி
தொல்லுல காதரவைக் கேட்டோம்-கிடைத்தபின்பு
மட்டிப்பய லைவிட மாட்டோம்-எனத்தெளிந்து
வண்டியைத் திருப்பினான் இன்னமா நடமாட்டம்!
                     -(கட்டாயம்)
   




( 190 )






( 195 )




( 200 )

சொல்லாமல் எல்லைபுக லாமா-புகந்தபின்பு
சோதாவாய்ப் பின்வாங்க லாமா-பின்வாங்கியவன்
எல்லையில் இடம்கேட்க லாமா-தராததாலே
எத்துக்கள் செய்தால்விடு வோமா-இன்னமும் சீனன்
பொல்லாங்கை விலைபேசுகின்றான்-எல்லைப்புறத்தில்
போராயுதங்கள் குவிக்கின்றான்-உலகிலுள்ள
எல்லாப் பழியும் சுமக்கின்றான்- இந்த நிலையில்
இந்நாட்டைச் சுரண்டியே தின்னக் குதிக்கின்றான்!
                     (கட்டாயம்)

காலத்தைக் கருதிட வேண்டும்-நமது மானம்
கட்டாயம் காக்கப்பட வேண்டும்-கொடுஞ்சீனனின்
மூலக்கருத்தை எண்ண வேண்டும்-இதேநொடியில்
முன்னேறித் தாங்கிடுதல் வேண்டும்-விடாது மேலும்
மேலும்நா யைத்துரத்திச் சென்று-சீனத்துக்கோட்டை
மேலே நம் மறவர்கள் நின்று-நம் வெற்றுக்கொடி
கோலம்பு ரியவைத்தல் நன்று-சூள் இதென்று
கொன்றோம் சீனப்படையை வென்றோம் எனப்புகன்று
                     (கட்டாயம்)



( 205 )




( 210 )





( 215 )

உலகின் அமைதியைக் கெடுக்காதே!

சென்றதடா அமைதி நோக்கி உலகம்-அட
சீனாக்காரா ஏண்டா இந்தக் கலகம்.
நன்றாக நீ திருந்த வேண்டும்
ஞாலம் உன்னை மதிக்கவேண்டும்
ஒன்றாய்ச் சேர்ந்து வாழவேண்டும்
ஒழுக்கம் கெட்டால் என்னவேண்டும்? -சென்றதடா

உலகம் எலாம் பொது வென்றாய்
உடமை எலாம் பொது வென்றாய்
கலகம் செய்து நிலத்தை எல்லாம்
கைப்பற்றத்தான் முயலுகின்றாய், -சென்ற...

பொது உடைமைக் கொள்கை ஒன்று
பூத்துக் காய்த்து வருமின்று
பொதுவுடைமை எனக்கென்று
புகன்றாயே குறுக்கில் நின்று. -சென்ற...

( 220 )




( 225 )






( 230 )

கொலைகாரப் பசங்களோடு
கூடுவது மானக்கேடே
இலைக்காக மரத்தை வெட்டிடில்
ஏற்றுக் கொள்வதெந்த நாடு? -சென்ற...

உயிர் காப்பது பொது உடைமை
உயிர் போக்குதல் பெருமடமை
உயர்வான இக் கருத்தை
உணர்வதுதான் உன் கடமை -சென்ற...

அறநெறியை முற்றும் நீக்கி
அழிவு செய்ய உலகை நோக்கிப்
புறப்பட்டாய் சீனாக்காரா
பொடியாகும் உன் துப்பாக்கி -சென்ற...

( 235 )





( 240 )





( 245 )

முனையிலே முகத்து நில்!

வீரம் வளரப் போர் வரவேண்டும்!

பல நூற்றாண்டாய் பாரத நாட்டில்
போரே இல்லை;அதனால் மக்கள்பால்
அஞ்சாமை என்பதே இல்லாது அமிழ்ந்தது;
நாட்டன்பு காட்ட வாய்ப்பே இல்லை.

கடமை உணர்ச்சி மடமையில் மாய்ந்தது;
ஓவியம் காவியம் அனைத்தும் உளத்தில்
பத்திமை ஒன்றையே பதியவைத்தன.

மறச்செயல் செய்ய வாய்ப்பே இல்லை
வெட்டுக் கத்தி வீசியதெலாம் போய்
அட்டைக் கத்தி வீசலாயினர்.




( 250 )






( 255 )

கல்வியில் வீரம் கடுகும் இல்லை
கூனிக் கொட்டாவி விட்டுவிட்டுப்
போன உயிர்போல் பொழுது போக்கினர்
ஒழுக்கம் பழுத்தது விழுப்பம் வீழ்ந்தது.

சைவம் வைணவம் முதலிய சமைய
மெய்ம் முழக்கமெலாம் பொய்ம்மை முழங்கின
தய்பிரான் மார்கள் தம்பிரான் அடியை
நம்பினார்; நாட்டை எண்ணுவதில்லை.

வாலியை மறைந்திருந்து மாய்த்த இராமனை
வீரன் என்று விளம்பினார் என்றால்,
படிப்படியாகப் பாரத நாட்டின்
அடிப்படை வீரமே அழுகியது உணர்க!



( 260 )






( 265 )


திலகர் தொடுத்த போர்

கரடியும் புலியும் இல்லாக் காடெனப்
போரிலா திருந்த இந்த நாட்டில்
திலகர் மக்களைப் போருக்குத் திரட்டினார்.
ஆங்கிலேயனை, அன்னவன் ஆட்சியை,
ஆங்கில மொழியை, அன்னவன் சரக்கை

 

( 270 )


அழிக்கவேண்டும் என்பன அனைத்தும்
திலகர் அந்நாள் இட்ட திட்டம்;
ஆங்கிலம் இதன்பால் அவிழ்த்து விட்ட
அடக்கு முறையால் அந்தத் திட்டம்
மக்கள் பால் மதிப்பைப் பெறுவதானது.
( 275 )


வீரர் எழுந்தனர் பாரதி தோன்றினார்

புதைந்திருந்த வீரம் புறத்தே எழுந்தது
ஆங்கிலேயனை அழித் தொழிக்க
எங்கணும் வீரர்கள் எழுந்தனர்; அவர்களில்
பாரதி ஒர் ஆள்! பாரத நாட்டில்

எங்கணும் தலைவர்கள் எழுந்தனர்; அவர்களில்
பாரதி பண்புறு தலைவர்! கவிஞர்
சிற்சிலர் எழுந்தனர், அவர்களில் பாரதி
ஒரு பெருங்கவிஞர்! உயிருளவரைக்கும்,

பாரதி பாரத நாட்டு வீரர்!
பாரதி பாரத நாட்டுத் தலைவர்!
பாரதி பாரத நாட்டின் கவிஞர்!






( 285 )





( 290 )



இந்த நாட்டில் இருந்த பல் வீரர்க்கும்
இந்த நாட்டில் இருந்த தலைவர்க்கும்
இந்த நாட்டில் இருந்த கலிஞர்க்கும்
பாரதிக்கும் வேற்றுமை பகர்வேன்;

அவர்கள் எல்லாம் கொள்கை அகன்றனர்
பாரதி பாரதியாகவே இருந்தார்
காந்தி கொள்கைக் கனல் இந்நாட்டில்
நன்று பரவிய போதும் அக் கொள்கை
வென்று முடித்த வேளையதிலும்
காந்தியண்ணல் கழறிவந்த



( 295 )





( 300 )

பாரதி போர் நூல்

ஊறிலாக் கொள்கையைப் பாரதி ஒப்பிலர்!
ஊறிலாக் கொள்கை உலகை வளைத்து
நாட்டை மீட்ட நாளிலே தான்
போர்நூல் புதிதாய்ப் புகன்றார் பாரதி;
அதுதான் புதிய ஆத்திசூடி ஆகும்.



( 305 )

காதல்நூல்-போர் நூல்

பாரத நாட்டின் நூற்கள் பலவும்
காதல்நூல் போர்நூல் என இருவகைப்படும்
அவைகளைத் தமிழர் அகத்திணை புறத்திணை
என்பார்-அவற்றுள் ஐயனாரிதனார்
புறப்பொருள் வெண்பா மாலை
விதைத்ததும் அறுக்கும் வீரப்பாடல்கள்
படித்ததும் எழுப்பும் பழநாள் போர்நூல்.


( 310 )




( 315 )

ஆத்திசூடி முழக்கம்

அதைத்தான் பாரதி அழகுறச் சுருக்கி
அச்சம் தவிர், ஆண்மை தவறேல்,
இளைத்தல் இகழ்ச்சி என்ற மூன்றால்
தொடக்கம் செய்தார் தூய நூலாகவே!
போரினை விரும்பாப் புலமையோர் ஆன
ஒளவையார் முனைமுகத்து நில்லேல் என்றார்
போரை விரும்பும் புலமையாளர்
பாரதி, 'முனையிலே முகத்துநில்' என்றார்.
'ஊன்மிக விரும்பு' நாளும் என்றார்.
ஏறு போல் நட என இயம்பிய அதுவும்
கீழோர்க் கஞ்சேல் எனக் கிளத்தியதும்
குன்றென நிமிர்ந்துநில் என்று கூறியதும்
எண்ணுக எண்ணுக இந்நாட்டிளைஞர்கள்.
கேட்டினும் துணுந்துநில் என்று கிளத்தித்
தேசத்தைக் காத்தல் செய் என்று செப்பினார்.
போர்த்தொழில் புரியேல் என்பதைப் புதைத்துப்
போர்த்தொழில் பழகுநீ என்று புகன்றார்.




( 320 )




( 325 )




( 330 )

சீனனை வெருட்ட!

சீனன் இந்த நாட்டில் சிற்றடி
வைத்தான் பாரதிஇச் சொல் வைத்தார்!
வெள்ளைக்காரனை வெருட்டச் சொன்னவர்
கொள்ளைக் காரனான சீனனை
எதிர்த்துப் போரிட இதனைச் சொன்னார்;
இறக்கவில்லை பாரதி இருக்கின்றார் அவர்
சாவதற்கஞ்சேல் என்று சாற்றிப்
புத்துயிர் நம்மிடம் புகுத்துகின்றார்.
சீனன் பெற்ற சிறிய வெற்றியைப்
பெரிதென எண்ணிடேல் என்று பேசுவார்
தோல்வியிற் கலங்கேல் என்று சொன்னார்.

பாரத வீரரே பாரத வீரரே
பாரதி பாரதப் படையின் தலைவர்
என்று நீவிர் எண்ணுதல் வேண்டும்
நல்வழி காட்ட வல்லவர் என்று
நம்புதல் வேண்டும் நவிலக் கேளீர்
கோல்கைக் கொண்டு வாழ் என்றார்
வேல்கொண்டு சீனனை வெல்லச் செல்கவே!
                         முன்னேறு...

( 335 )




( 340 )




( 345 )





( 350 )

ஏறு முன்னேறுதி ராவிடனே
இன்னலை நீக்குதல் உன்கடனே-விரைந்தேறு...

வீறுகொண்டேறு விரைந்துமுன் னேருவி
ழாக்கண்ட பிள்ளையைப் போல் மகிழ்ந்தேறு

நீறுபடுத்திடு வாய்பகை நெஞ்சினை
நீதான் இறைவன் திராவிட நாட்டினுக்-கேறு...
குமரிஇத் தெற்கிலும் வங்கம் வடக்கிலும்
கொட்டும் திரைக்கடல் மற்றிரு பாங்கிலும்
அமையக் கிடந்த திராவிட நாட்டினை
ஆண்டவன் ஆளப் பிறந்தவன் நீ விரைந்-தேறு

செல்வத்தை நல்கும் மலைகளும் மண்ணிடைத்
தேனென்று பாய்ந்திடும் ஆறும் சுனைகளும்
நெல்லைக் குவித்திடும் நன்செயும் முத்தை
நிறைக்கும் திரைகொள் திராவிடம் வெல்கஎன்-றேறு

வையம் எதிர்த்து வந்தாலும் கலங்காத
மறவரும் பச்சை மயிலொத்த பெண்களும்
மெய்யறம் காத்துநல்லின்பத்தி லாழ்ந்திடும்
மேன்மைத் திராவிடம் வாழியவே என-ஏறு



( 355 )





( 360 )





( 365 )





( 370 )

பிள்ளைப் பாட்டு

நிலா

துருக்கச் சிறுவன்;-
       நிலவே நிலவே நிப்பாய் நிலவே!
       மெருகு கொடுத்த வெள்ளி நிலவே!
       நாங்கள் உன்னை நாயம் கேட்போம்
       கூறவேண்டும் குளிர்ந்த நிலவே!
       மூன்றாம்பிறையாய்த் தோன்றுங்காலை
       என் கூட்டத்தார் உன்னைத் தொழுவார்
       ஆதலாலே அழகு நிலவே!
       துருக்கருக்குச் சொந்தப் பொருள்நீ!

கத்தோலிக்கச் சிறுவன்;-

       கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள்
       ஆதலாலே அழகு நிலவே!
       கத்தோலிக்கர் சொத்து நீதான்!

இந்துச் சிறுவன்;-

       எங்கள் சிவனார் முடியில் இருப்பாய்
       ஆதலாலே அழகு நிலவே!
       இந்துமதத்தார் சொந்தப்பொருள் நீ!

மூவரும்;
       மூன்று பேரும் மொழியக் கேட்டாய்
       யார்க்குச் சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்?





( 375 )





( 380 )







( 385 )





( 390 )

க.ம. சிறுவன், மற்றப் பிள்ளைகளைக்குறித்து;-

       உன் தகப்பன் உளறு வாயன்
       துருக்கனென்று சொன்னான் உன்னை.
       உன் தகப்பன் உளறுவாயன்
       கத்தோலிக்கப் பட்டம் கட்டினான்.
       உன் தகப்பன் உளறுவாயன்
       இந்து என்றான் ஏற்றுக்கொண்டாய்!
       துருக்கன் என்ற சொல்லை நீக்கு!
       கத்தோலிக்கப் பித்தம் தொலைப்பாய்!
       இந்து என்ற சிந்தனை வேண்டாம்!
       யாவரும் மனிதர் என்பது தெரிந்தால்
       நிலவும் பொதுவே என்பது தெரியும்.
       அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே.





( 395 )




( 400 )

வாழ்க திராவிடம்

நிழலில் இருந்த நின்உடல் நிறமும்.
வெயிலில் இருந்தஉன் கையின் நிறமும்,
வேறாயினும், அம்மெய்யும், கையும்,
வேறுவே றென்று விளம்புவ துண்டா?
நீயும் தெலுங்கனும் நீங்கொணா இனத்தவர்,
இந்த உண்மையை "இடைநாள என்னும்
நிழல்மறைத் திருந்தது. நீ,உன் உணர்வால்,
உள்ள உறவினை உற்று நோக்குக.

பரந்து கிடக்கும்உன் பழந்தமிழ் நாட்டைப்
பார்! உன் பைந்தமிழ்ச் சீர்பார்! மகிழ்ச்சிகொள்!

உன்னையும் தெலுங்கன் தன்னையும் விடாமல்
ஒன்று சேர்க்கும் ஓர் "உறவை" நீஏன்
அறுக்க முயன்றனை? ஆகுமா உன்னால்?
பிறர்கண் டஞ்சுமுன் பெரியபட் டாளத்தை
அறுத்துக் குறுக்குதல் அறியாமை அன்றோ!
ஏன்உன் இனத்தை எதிர்த்தாக்கி
ஊனத்தை நாட்டுக் குண்டாக்கு கின்றாய்?
அயலார் தம்மை நீ அண்டவில்லை யே ;
தெலுங்கனை நம்மருஞ் செந்தமிழ் மறவனை
அடைகின்றாய் நீ, அறஞ்செய்கின்றாய்!


( 405 )




( 410 )





( 415 )




( 420 )

அகத்தில் உணர்ச்சி அருவி பாய்ச்சும்
நம்மருந் தாய்த்தமிழ் செம்மைப் பழந்தமிழ்,
தெலுங்கென ஒருமொழி செப்பியதுண்டா?
கன்னடம் உண்டெனக் கழறியதுண்டா?
கேரளம் உண்டெனக் கிளத்தியதுண்டா?
துளுவம் உண்டெனச் சொன்னதுண்டா?
சேரன் பிறன் என்று செந்தமிழ் சொன்னதா?

அன்னவன் நாட்டை அயல்நாடென்றதா?
பாண்டிய நாட்டைப் பழந்தமிழ் வெறுத்ததா?
சோழ நாட்டைத் தொடாதீர் என்றதா?
தலைமுறை தலைமுறை தலைமுறை யாகக்
கிடந்துஉன் புகழுக் கடையாள மாக
இருந்தஉன் விற்கொடி எட்டிபோல் கசந்ததா?
கயற்கொடி புலிக்கொடி கசப்பா நல்கின?

"தெலுங்க நாடு" செப்பு கேரளம்
கன்னடம் துளுவம் என்னும் நாடுகள்
அனைத்தும் புதுப்பெயர் ஆம்என அறிக.
எல்லாம் பழந்தமிழ் நாடென இயம்புக.
யாவரும் என்றன் இனத்தார் என்க.
திராவிடம் என்றன் திருநாடென்று
சரேலென எழுக தடந்தோள் ஆர்த்தே!
மீட்பாய் திராவிட நாட்டை! அதோ பார்
வீழ்ந்த துன்றன் பகைப் புலம்
வாழ்ந்தனர் திராவிட மக்கள் இனிதே!

( 425 )




( 430 )





( 435 )





( 440 )




( 445 )

பாரீஸ் விடுதலை விழா!

வெண்ணிலா, முகிலினின்று
மீண்டது போலே மீண்டாய்
எண்ணிலா மகிழ்ச்சி யூட்டும்
எழில் பாரீஸ் நகரே நீதான்!
கண்ணிலா இட்லர் நின்பால்
கால் வைத்தான்! தோல்வி பெற்றான்!
மண்ணுளார் துயரினின்று
மீண்டனர். மகிழ்ச்சியுற்றார்.

தனித்தாளும் ஆட்சி என்னும்
தவிர்ப்பதற் கரிய நோயை
இனித்தாளோம் எனக்கிடந்த
வையத்துக் கிரத்தம் சிந்தி
மனிதரே ஆள்வ தென்ற
மாண்புறு மருந்தின் நுட்பந்
தனைக் காட்டிப், பிராஞ்சு நாடே
சாற்றரும் பெருமை பெற்றாய்.



( 450 )




( 455 )





( 460 )

"பிறப்புரி மைகாண் பார்க்கும்
விடுதலை" எனப் பிழிந்த
நறுந்தேனை எங்கும், பெய்தாய்!
நால்வகைச் சாதி யில்லை;
தருக்குறும் மேல், கீழ் இல்லை
சமம் யாரும் என்றாய்! வானில்
அறைந்தானை முரசம் "மக்கள்
உடன்பிறப் பாளர என்றே!

கல்வியைப் பொதுமை யாக்கிக்,
காட்டினாய் நல்வே டிக்கை!
செல்வரின் இல்லத் துள்ளும்
வறியரின் சிறுவீட் டுள்ளும்
நல்லறி வென்னும் பெண்ணாள்
மாறின்றி நண்ணலுற்றாள்
வில்லிருள் புறங்காட்டிற்று
வையகம் அறிந்ததன்றோ!

வையத்து மக்கள் உன்சீர்
மறக்கிலார்! அவர்கள் நீண்ட
கையெலாம் உன்னைக் காக்கக்
கவிந்திடும் என்ற செய்தி,
பொய்யெலாம் உருக்கொண்டுள்ள
பகைவர்க்குப் புரியவில்லை!
மெய்! பாரீஸ் மீண்டதிந்நாள்!
நாளைமீள்வாய் பிரான்சே!

( 465 )




( 470 )





( 475 )




( 480 )




( 485 )

இலை மறை காயோ? இல்லை!
இவ்வையம் அறியும்; போரின்
கலைமுறை பிறழா வண்ணம்
பகைவரைக் கலக்கும் வீரர்
தலைமுறை யுடையாய்! மண்பின்
தக்காரைப் பெற்றுள் ளாய்நீ!
நிலைகலங்காத் தெகோல்சீர்
நிகழ்த்தவோ பிராஞ்சு நாடே?

வழி உண்டாம்; நண்பு கொள்ள
நாடுகள் வந்து சேரும்;
விழியுண்டாம்; வன்மை உண்டாம்
மீட்போம் நாம் என்று போரின்
தொழில் கண்ட தெகோல் இருந்தார்
தூய்நாடே மீட்சி கண்டாய்
பழிகாரர் பட்ட பாடு
கொஞ்சமா ரஷியராலே?


( 490 )




( 495 )





( 500 )


தொல்லையை ஒருகை தாங்க
மற்றோர்கை சுறுசு றுப்பால்
வல்லபோர்க் கருவி செய்து
வரும்பகை மறுத்து, நின்பால்
நல்லுளம் காட்டும் இங்கி
லந்துக்கு நன்றி சொல்வோம்
வெல்லும் ஆயுதம் கடல்போல்
அமெரிக்கா தருதல் வீணோ!

சீனத்தின் ஒத்து ழைப்பும்
தெரிந்துள் ளோம். பிராஞ்சு நாடே
மானத்தை உயிராய்க் கொண்ட
நின்மக்கள், பகைவர் என்னும்
கானத்து விலங்கி னத்தைக்
கடிந்ததில் வியப்பும் உண்டோ!
தேனொத்த தமிழரின் போர்ச்
செயலையும் மறக்க வேண்டாம்.

குடியேற்ற நாடு தோறும்
நீவெற்றி கொள்ளத் தொண்டு
முடியேற்றுச் செய்தார் உன்றன்
முழுதன்பர் என்றால் இங்கு
கொடிதோறும் நோற்ற நல்லார்
போன்வேனே சிறந்தார் என்போம்
கொடியேற்றுப் பிரஞ்சுநாடே
முழுவெற்றி கொண்டு வாழ்க!

( 505 )




( 510 )





( 515 )





( 520 )




( 525 )

என் கருத்தில்...

வள்ளுவர்க்கு நிறமில்லை மதமும் இல்லை
    மதங்கட்[கு] அப்பாலிருந்தே குறள் செய்துள்ளார்
உள்ளசிறு மதங்குறிக்கும் சொற்கள் கொண்டே
    உவகையொடு தத்தமது மதத்தில் சேர்த்து
தெள்ளிவைத்த நீறிடுதல் திருமணம் சார்த்தல்
    செழும்பிண்டி அமர்ந்தாளைச் சேர்ந்தான் என்னல்
தள்ளிவைத்த மரபென்று பேசல் யாவும்
    சரியென்று தோன்றவில்லை என்கருத்தில்!



( 530 )




( 535 )