| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 323 |
Untitled Document | | கோபுரம் சிகரம் கொடிமர மெல்லாம் வானுற ஓங்கி வளரும் ஆலயம் அழகழ காக அமைத்திடு கின்றனர்? மந்திரம் போனகம் வாடா விளக்கு இவை நித்தம் நடைபெற நிலம் விடுகின்றனர் துடிக்கத் துடிக்கத் துள்ளும் மறிகளைப் பகுத்தறி வின்றிப் பலியிடு கின்றனர். அன்ன சாலையில் அந்தணர் நிதமும் உண்டு களிக்க உணவிடு கின்றனர்! அன்னியர்க்கு அல்ல அடியவர்க்கு எனினும் இவ்வுல கதனில் யாதும் ஒருநலம் செய்தறியாத தேவரை நோக்கிக் 'கங்கா தரனே, கண்ண பிரானே! காப்பாய் காப்பாய் காப்பாய்' என்ன, (அன்பின் மிகுதியோ அச்சமோ அறியேம்) தொழுது போற்றும் தோத்திரப் பாக்கள் வானில் முழங்கும் வல்லிடி போல என்றும் என்றும் எழுந்திடு கின்றன! இவற்றால், வாழ்க்கையில் நித்தம் வளருந் துயரோ? - ஆசைப் பொருளை அடையாத் துயரோ இருந்த பொருளை இழந்த துயரோ நோய்வாய்ப்பட்டு நொந்திடு துயரோ நரைதிரை மூப்பால் நண்ணுந் துயரோ மாறாக் கொடிய மரணத் துயரோ சனன மரணச் சக்கரம் சுழன்று பின்னும் பின்னும் பிறந்த பிறந்து உயிர்கள் அடையும் ஓயாத் துயரோ - யாதும் ஒருதுயர் இம்மி யளவும் நீங்கி எவரும் நித்தியா னந்த வாழ்வடைந்து இங்கு வாழ்வதும் உண்டோ? அருமை மங்கையர் அன்பு நிறைந்து நோற்கும் பற்பல நோன்புகளாலும் | |
|
|