Untitled Document | | பாடும் தோத்திரப் பாடல்களாலும் எய்திய நன்மை யாதும் உண்டோ? அவர், தூர்த்து மெழுகிப் துப்புர வாக்கித் துளசி மாடம் தொழுவத னாலும், பாலும் பழமும் பணிகா ரங்களும் பக்தி யோடு படைப்பத னாலும் பேறு காலம் பெறுநோக் காடு கொஞ்ச மேனும் குறைந்தது உண்டோ? திருந்திய நல்ல தேவரும் உண்டு; தீயரும் அவருள் சிற்சிலர் உண்டு; உண்மை இதுவென்று உணர்வதும் அரிதாம், ஆயினும், யாவரும் செய்கையில் எளியவ ரேயாம். முன்னைப் பிறப்பும் முடிவும் அப்பால் பின்னைப் பிறக்கும் பிறப் பின் விளைவும், ஐயம் இன்றி அறிகுவ ரேனும், இவர், சனன மரணச் சக்கர மதனில் சிக்கிச் சுழன்று திகைப்புறு வோரே, உலகில் வாழும் உயிரின் பிறப்பிடம் அறிவிற் கெட்டா தாயினும், அவ்வுயிர், படிப்படி யாய்இப் படியின் மீதுஓர் அணுவாய்க் கொசுவாய் அரிக்கும் புழுவாய் பாம்பாய் மீனாய்ப் பறவையாய் மிருகமாய் மனிதனாய்ப் பூதமாய் வானுறை தேவனாய்த் தெய்வமாய்த் தேன்றித் திரும்பவும் அவ்வழி மண்ணாய் அணுவாய் மாறுதல் இயல்பாம், ஆதலின் புவிமீ துள்ள பொருள்கள் அனைத்தும் சுற்றம் போலத் தொடர்புடை யனவே. அஞ்ஞானத்தில் அழுந்தி அழுந்தி நைந்து நொந்து நடுங்கி நிதமும் | |
|
|