| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 325 |
Untitled Document | | உழலும் மனிதர் உய்யும் வழியினைக் கண்டொரு மனிதன் காட்டிடின், அதனால் இவ், வையகம் முழுவதும் வாழ்வது திண்ணம் கல்லில் முன்னம் கரந்து கிடந்த எரியினைத் தட்டி எழுப்பி ஒருவன் காட்டிய நாள்வரை, கடுங்கால் மாரி வாடையில் மக்கள் வருந்தி நைந்தனர்; பருவ மறிந்து பயிர்செய் தொருவன் தானியம் எடுத்துத் தருவதன் முன்னம் உழுவை போல ஊனை உண்டு மனிதனும் உலகில் வாழ்ந்து வந்தனன். பாரிற் பேசிப் பழகும் மொழிதான் ஒருவன் நாவில் உருப்பெறும் முன்னம், ஏட்டில் எழுதும் எழுத்தின் வடிவை ஆராய்ந் தாராய்ந்து அமைப்பதன் முன்னம், மனிதர், ஊமைகள் போல உளறித் திரிந்தனர். கையால் சாடை காட்டி அலைந்தனர். ஆழ்ந்து கண்ட அறிவி னாலும் ஓயா துழைக்கும் உழைப்பி னாலும் தேர்ந்து செய்யும் தியாகத் தாலும் அன்றிஓர் நன்மைஇவ் அகில மீது மனிதர்க்கு என்றும் வாய்த்ததும் உண்டோ? ஆதலின், உடலின் உறுதியும் ஊக்கமும் உடையோன்- பொருளும் புகழும் புத்தியும் உடையோன், காசினி யாளக் கருதுவ தேல்ஓர் மன்னர் மன்னனாய் வாழுதற் குரியோன், குலத்திற் பிறந்த குணந்திகழ் கோமான் வாழ்வில் ஓய்ந்து மனந்தள ராமல் அதன், இன்பத் துறையில் இறங்கி நிற்போன், விஞ்சிய காதல் விருந்தை அருந்தி அமையா தெங்கும் ஆசை யுடையான், | |
|
|