| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 379 |
Untitled Document | 1742 | | அல்லும் பகலும் விவேகத்தால் அடைந்த கவலைக் களவில்லை தொல்லை நீங்க இன்றவளைத் துரத்தி விட்டுத் துணிவாகச் செல்வி திராட்ச வல்லிதரும் தெய்வ மகளை மணந்துகொண்டேன்; இல்லை துயரம் இல்லையினி இன்பம் என்றும் இன்பமதே. | 73 |
| 1743 | | உண்ணும் மதுவும், நீயுள்ளம் உருகி முத்தம் இடுமுகமும், எண்ணும் பொருள்கள் முடிவதுபோல், இன்மை யேயாய் முடிவுமெனில், மண்ணில் இந்நாள் நிலையும்இனி வருநாள் நிலைபோல் இன்மையதாம் திண்ணம் இந்த அளவினிலோர் சிறிதும் குறையாது அறிவாயே. | 74 |
| 1744 | | இதற்கும் அதற்கும் எத்தனைநாள்? இரவும் பகலும் சண்டை? அப்பா! புதர்க்குள் இல்லாக் கனிதேடிப் புற்றில் நாக மணிதேடிப் பதைத்து வீழ்ந்து பயனுண்டோ? பாரில் அமுத சுரபியினுள் முதற்கு முதலாம் திராட்சையினை முற்றும் நம்பி வாழ்வாயே. | 75 |
| 1745 | | மங்கும் மாலைப் பொழுதினிலே மதுவின் சாலை வாயில்வழி எங்கும் யான்கண் டறியாத எழிலார் தெய்வ வடிவுடையோன் தங்கக் கலசம் தாங்கிவந்தான், ‘சற்றே பருகிப் பார்’ என்றான்; எங்கும் கிடையா அவ்வமுதம் இனிய திராட்சை ரசம் அப்பா! | 76 | |
|
|