| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 383 |
Untitled Document | 1758 | | மோசக்காரன் பொன்னன் அப்பா! முத்தம்மாள் ஓர்வேசி, அப்பா! ஆசை காட்டி இழுத்துன்னை ஆழக் குழியில் வீழ்த்திடுவார்; ‘பாசம்’ ‘நேசம்’ என்பதெலாம் பாசாங் கன்றி வேறில்லை; ஈசன் அடியை மறவாமல் என்றும் ஏத்தி வாழ்வாயே. | 89 |
| 1759 | | ஆவித் துணையே! அருட்கடலே! அருளால் அருள்செய் ஆண்டவனே! பாவி எனக்குன் அருள்நோக்கம் பாலித் திடுதல் ஆகாதோ? மேவும் அரிய புண்ணியமாம் விலைகொண் டதனை விற்பாயேல், யாவர் உய்வர்? இவ்வுலகில் ஏழை மக்கள் என்செய்வார்? | 90 |
| 1760 | | நாடும் ஈசன் பாவிகளை நரகில் வீழ்த்தி விடுவானென்று ஏடு நிறையப் பண்டிதர்கள் எழுதி வைத்துப் போய்விட்டார்; ஈடி லாத அவனருளை என்றும் அன்பால் உள்ளுருகி ஆடிப் பாடும் அடியாரால் அயலார் அறிய வல்லாரோ? | 91 |
| 1761 | | வைய மிசையுன் னடிபற்றி வாழும் அடியார் தனையேநீ உய்ய வைத்தல் செய்வேலைக்கு உதவு கூலியாம்; எவரும் செய்யொ ணாத பழிபாவம் செய்த பொல்லா நீசரையும் ஐய மின்றி ஆளுதலே அருளாம்; எங்கள் பெருமானே! | 92 | |
|
|