பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு385

Untitled Document
1766 என்னை நோக்கி எதிர்வந்தான்,
     யானும் நிலனை நோக்கிநின்றேன்;
என்னை முத்த மிடவந்தான்,
     யானும் நழுவ வழிபார்த்தேன்;
இன்னும் நிற்பான் என்றிருந்தேன்;
     இமைப்பின் ஓடி மறைந்திட்டான்;
இன்னும் தேடி அலைகின்றேன்;
     எங்கும் காணேன்; என்செய்வேன்?
97

1767 ஏது ஏது மில்லாமல்
     என்னைத் தனியே வைத்தாய்நீ;
தூதின் வரவு காணாமல்
     தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன்;
நீதி இதுவோ? நெறியிதுவோ?
     நீசெய் குறையை நிறைசெய்ய
ஓது வாழ்நாள் நீண்டிடுமோ?
     உள்ளம் இதனை உணராதோ?
98

1768 என்றும் என்றும் என்குறைகள்
     இரவும் பகலும் ஆராய்வேன்;
அன்றி அயலார் குறைகாணில்
     அடைத்துக் கண்ணை மூடிடுவேன்;
இன்றிவ் உலகின் கொடுமையெலாம்
     இதயம் பிறவு செய்திடுமால்;
ஒன்றி யிங்கு வாழ்வதிலும்
     ஓடி ஒழிதல் நலமாமே.
99

1769 எண்ணி எண்ணி என்குறைகள்
     ஏனோ நிதமும் கூறிடுவர்?
பண்ணுஞ் செயல்கள் பழித்திடுவர்;
     பாவி என்றுந் தூற்றிடுவர்
மண்ணில் யானோர் ஒளிவட்டம்;
     மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்
கண்ணிற் காண்பது அவரவர்தம்
     காட்சி யல்லால் வேறாமோ?
100