Untitled Document | | பசு மேய்ந்தால் பால் சுரக்கும், பால் சுரந்தால் கன்று குடிக்கும்; கன்று குடித்து மிஞ்சியதைக் கறந்து கொண்டு வந்திடலாம்! காப்பியில் விட்டுக் குடித்திடலாம். |
273 | | மின்னி மேகம் பரவுது, மெல்ல மெல்லத் துளிக்குது; என்ன சொல்லித் துளிக்கு தென்று இயம்பு கின்றேன் கேளம்மா! |
274 | | 'மண்ணில் கொஞ்ச நாட்களாய் மறைந்து றங்கும் செடிகளே! கண்ம லர்ந்து வாருங்கள்; காலை யாச்சு' தென்குது. |
275 | | 'பட்டு டுத்து வாருங்கள்; பணிகள் பூண்டு, வாருங்கள்; பொட்ட ணிந்து சீக்கிரம் புறப்ப டுங்கள்' என்குது. |
276 | | 'வாசச் செப்பைத் திறவுங்கள்; வாரி யெங்கும் வீசுங்கள்; ஈசன் பாத பூசனைக்கு எழுந்தி ருங்கள்' என்குது. |
277 | | 'வாட்ட மெல்லாம் நீங்கவே வசந்த காலம் வந்தது; மீட்டும் நன்மை காணலாம்; விரைந்தெ ழுங்கள்' என்குது. |
278 | | கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். | |
|
|