பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு471

Untitled Document
1250 - 1252 ஒளவையார் நாடகம்
     நாகர்கோவில் ஒழுகினசேரி சரஸ்வதி ஹாலில் 8-9-1950 டி.கே.எஸ்.
சகோதரர் குழுவினர் நடத்திய ஒளவையார் நாடகத்தைக் கண்டு களித்த
போது எழுதிய       பாடல்கள். இவை தனி பிரசுரமாகவும் அச்சடித்து
வினியோகிக்கப்பட்டிருக்கிறது.

     1250   பா.பே. இப்பாடலின் இறுதி இரு அடிகளின் வேறு வடிவம்
உண்டு.     (செந்தமிழ் நாடு .............. காட்சி இது - “............. செந்தமிழை
அன்று வளர்த்   தாண்ட அழுதமொழி ஒளவை நமக்கின்றளித்த காட்சி
இது.” (சி.பி.)

1253-1261 குடியரசு

1253, 1254, 1256, 1257 -
‘கல்கி’ குடியரசு மலர் 26-1-1950
1255 ‘பார்வதி மாத இதழ்
குடியரசு மலர் பெப் 1950. முந்திய தலைப்பு “எத்திசையும்
புகழ்வளர”
1258 ‘கலைக்கதிர்’ பொங்கல் மலர் தை 1950
1259 ‘தினமணி’ குடியரசு மலர் 26-1-1950
1260-1261 ம.மா.தொ.இ.பா. பாடல்கள் (கை.எ.பி.)

1262 - 1264 கம்பன் விழா

     ம.மா.தொ.இ. பாடல்கள்   (கை.எ.பி.) 1950ல் காரைக்குடியில் நடந்த
கம்பன் விழாவிற்கு அனுப்பியவை.

1265 - 1270 பொங்கல் வாழ்த்துக்கள்

1265 ‘கலைமகள்’ 1953 பொங்கல் சிறப்பு மலர்
1266 ‘கலைக்கதிர்’ 1953 ஜனவரி
1267-1269 ‘தினமணி 1953 பொங்கல் மலர்
1270 ‘தினமலர்’ பொங்கல் மலர் 1953.

1271 - 1273 திருமூல மன்னர்

     திருவிதாங்கூர்     அரசரான திருமூலமன்னர் மலையாள ஆண்டு
1099ல் (1924) ஆடி மாதம் 23ஆம் ஆண்டு மறைந்தார்.