Untitled Document | | | புவியணி கவிகள் பாடும் புலமையைப் போற்று கேனோ? செவிமகிழ் இனிய சொல்லின் செறிவினை மெச்சு கேனோ? நவம்மிகப் பழமை பேசும் நயத்தினைப் புகழு வேனோ? கவிமணி யவரை வாழ்த்தக் காரணம் எதனைச் சொல்வேன்?
பொய்யகம் நீக்கி வஞ்சப் புலன்களை அடக்கி யாண்டு வையகம் முழுதும் வாழ வரந்தர வல்ல நல்லான் மெய்யகம் வணங்கி நின்று மேலொரு பொருளைப் போற்றிக் கையகம் கூப்பி, ‘எங்கள் கவிமணி வாழ்க!’ என்பேன்
பொன்னுடை பூட்டி அந்தப் புலவனைப் புகழ்வ தென்ற நன்னய உணர்ச்சி கொண்ட நண்பர்கள் பலரும் வாழ்க!
முன்னுற நின்று இந்த முயற்சியைச் சிறக்கச் செய்த என்னுடை இனிய நண்பன் சண்முகம் இனிது வாழ்க!
4. பரலி ச.நெல்லையப்ப பிள்ளை
தேனைப் பாலை முக்கனியைத் தெவிட்டா அமுதைச் சிந்திக்கும் ஊனம் இல்லா உன் கவியை உன்னும் போதென் உள்ளந்தான் | | |
|
|