நீ இவ்வளவு காலம் எங்கிருந்தாய்?
பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின் ஒரு நிலவறையிலிருந்து பதப்படுத்தப்பட்டு வெளிவந்த வீறுமிக்க மதுவைப் போல்-
பதினாறு பதினேழு மார்கழிக்குப் பின் ஒரு களங்கமற்ற இதயத்தில் கருவாயிருந்து கலை அலங்காரத்தோடு உருவாகி வந்த ஓர் உயிருள்ள காவியம் போல்-
பதினேழு பதினெட்டுத் தைக்குப் பின் ஒரு சின்னஞ் சிறிய தீவில் ஒதுங்கியிருந்து வைரக் குப்பையோடு கடல்வாசல் வந்த ஒரு சுதேசிக் கப்பலைப் போல்-
நீ என் கண்ணைக் கவர்கிறாய்.
உன் வருகையால் இன்பச் சிகரத்தைக் கையால் எட்டித் தொடுகிறேன்-
என்றாலும் இவ்வளவு காலமும் உன்னைக் காணாமல் வீணாகப் போய்விட்டதே என்று எண்ணிக் கவலைப் பள்ளத்தில் கால் வழுக்கி விழவும் செய்கிறேன்.
2 |
|
|
|