நீ சுவரில் சாய்ந்து கொண்டு நிற்கிறாய்.
உன் தோழி “நீங்கள் ஏழையா, பணக்காரரா?” என்று கேட்கிறாள்.
நான் ஏங்கல்ஸின் மாணவன், எனினும் வேடிக்கைக்காக “நான் இதுவரை ஏழைதான், இனிமேல்தான் பணக்காரன் ஆகவேண்டும்” என்று உன்னைப் பார்த்துக்கொண்டே பதில் சொல்கிறேன்,
ஒரு கைத் தாமரையால் உன் முகத் தாமரையின் ஒரு பாதியை மறைத்தவாறு நீ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.
உன் தோழிக்குப் புரிகிறதோ, என்னவோ?
இதுவும் ஒரு கனவுதான்.
41 |
|
|
|