ஒரு நண்பகலில், அந்தத் தென்னந் தோப்பில் நீ நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாய்.
உலகத்தின் அமர சௌந்தரியம் அனைத்தும் உன்னிடம் கொலுவிருப்பதைத் தரிசித்து மெய்மறக்கிறேன்.
புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப் பார்த்து மலைக்கும் ஓர் இந்திய உழவனைப் போல் வியப்படைகிறேன்; அந்த வியப்பில் ஆழ்ந்தபடியே உன்னை எழுப்பாமல் நிற்கிறேன்.
அப்படி எழுப்பினால், ஒரு கல்லை வீசியதும் வரிசை வரிசையாய் அமர்ந்திருக்கும் பறவைகள் சிதறிப் பறப்பதைப் போல் உன் துயில் அழகுகள் சிதறிப் பறந்து விடுமே என்று அஞ்சுகிறேன்.
55 |
|
|
|