ஒரு மாலையில், நீ புல்லாங்குழலை ஊதிக் கொண்டிருக்கிறாய்.
உன் உதடு படும் பேறு அதற்குக் கிடைத்ததே என்று பொறாமைப் படுகிறேன்.
சின்னப் பிள்ளையிடம் ஏமாற்றி ஏமாற்றிப் பண்டங்களை வாங்கித் தின்னும் கெட்டிக்கார வேலைக்காரி போல் அது உன் வாயமுதத்தைக் கொள்ளையடிப்பதைக் கண்டு கோபப்படுகிறேன்.
“அந்தப் புல்லாங்குழலைக் கொடு” என்கிறேன்,
“சும்மா வாங்கப்பார்க்கிறீர்களே” என்கிறாய்:
“ஏதாவது கொடுத்து வாங்குகிறேன்” என்று உன்னை நெருங்குகிறேன்.
மண்ணும் விண்ணும் ஒன்றாகின்றன.
56 |
|
|
|